மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை + "||" + Tamil Nadu Assembly Election: Udayanithi Stalin's lead in Chepauk constituency

தமிழக சட்டமன்ற தேர்தல்: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தல்: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.
சென்னை, 

தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. . 

அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 141 இடங்களில் திமுக கூட்டணியினர் முன்னிலையில் உள்ளனர். அதேபோல், 92 இடங்களில் அதிமுக கூட்டணியினரும் முன்னிலை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 10,996 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி உதயநிதி ஸ்டாலின் 14,448 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிடும் பாமக வேட்பாளர் கஸ்சாலி 3,452 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார்.
2. தமிழகத்தில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவு
முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன
3. தமிழக சட்ட சபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நிறைவு பெற்றது.
4. தமிழக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
5. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்: திமுக தேர்தல் அறிக்கை
திமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானநிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.