மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை + "||" + Tamil Nadu Assembly Election: Chief Minister Palanisamy leads by 26,629 votes

தமிழக சட்டமன்ற தேர்தல்: முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தல்: முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
சேலம்,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்படி தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

எடப்பாடி தொகுதியில் 6வது முறையாக போட்டியிடும், தற்போதைய முதலமைச்சர் பழனிச்சாமி, 1984, 1991 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அடுத்து 2006 தேர்தலில் தோல்வியடைந்தார். அதற்கு பிறகு, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார். 

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து திமுகவில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

இந்த சூழலில் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி, தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவில், முன்னிலை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்து திமுக வேட்பாளர் சம்பத்குமார் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 40,834 வாக்குகளும், திமுக வேட்பாளார் சம்பத்குமார் 14,205 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஸ்ரீரத்னா 2,003 வக்குகளும் பெற்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்டமன்ற தேர்தல்: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.
2. தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார்.
3. தமிழகத்தில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவு
முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன
4. தமிழக சட்ட சபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நிறைவு பெற்றது.
5. தமிழக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.