மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி + "||" + Naam Thamilar are the 3rd largest party in Tamil Nadu so far

தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் நீடித்து வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. 

சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
 
முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருந்தது. தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது. 

2019-ஆம் ஆண்டு 22 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15% வாக்குகளை பெற்றது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9% வாக்குகளை பெற்றது. இதனிடையே 2019 உள்ளாட்சி தேர்தலில் ராஜாக்காமங்கலம் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தற்போது 2021 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது. 

இதன்படி சீமானின் நாம் தமிழர் கட்சி, பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. திமுக, அதிமுக வேட்பாளர்களின் வாக்குகளுடன் ஒப்பிடும் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வாக்கு குறைவுதான். ஆனால், அவர்தான் தற்போது மூன்றாம் இடம் பிடிக்கிறார். இதன் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தல் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 5 அமைச்சர்கள் பின்னடைவு
சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி 133 இடங்களிலும், அதிமுக கூட்டணி 99 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன
2. சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102 இடங்களிலும் முன்னிலை
சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன
3. தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது; முழு முடிவுகள் தெரிய நள்ளிரவு ஆகலாம்
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 98.6 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தால் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களுக்குள் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தி்ல உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் இன்று மேலும் 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 107 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.