மாநில செய்திகள்

தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்- இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை + "||" + thenampet Police Inspector Murali Suspended - Election Commission of India

தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்- இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்- இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை
திமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

திமுக தலைமையகம் அமைந்துள்ள தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளியை பணி இடை நீக்கம் செய்து  இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 நீதிமன்ற உத்தரவின் படி கொரோனா விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால்  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிவாலய வளாகத்தில் இருந்து திமுக தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

இதற்கிடையில், கொரோனா தொற்றை மனதில் கொண்டு  திமுகவினர்  எந்தவித கொண்டாட்டங்களையும் வீதியில் கூடி நடத்த வேண்டாம் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தி உள்ளார். மேலும் கூட்டம் கூடாமல் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொளத்தூர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: மு.க.ஸ்டாலின் முன்னிலை
தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.
2. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம் திமுக சார்பில் கூறியது என்ன...?
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
3. திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
4. திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன்; அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
தேர்தலையொட்டி திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லனாகவும் உள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
5. தி.மு.க. தேர்தல் அறிக்கை: மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்
திமுக தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிடுகிறார்.