தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக தலைவர் எல். முருகன் திடீர் பின்னடைவு


தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக தலைவர் எல். முருகன் திடீர் பின்னடைவு
x
தினத்தந்தி 2 May 2021 10:43 AM GMT (Updated: 2 May 2021 10:43 AM GMT)

தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக தலைவர் எல். முருகன் திடீர் பின்னடைவை சந்தித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில் அதிமுக சார்பில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. அதில் 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்பு, ஹெச்.ராஜா, அண்ணாமலை உள்ளிட்டோர் தொடர்ந்து  பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

பாஜக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளரான எல். முருகன்  தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். தற்போது 14-வது சுற்றில் பின்னடைவை சந்தித்திருக்கிறார். தாராபுரம் தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த கயல்விழி   48,998 வாக்குகளையும், எல்.முருகன் 47, 832 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதன் மூலமாக எல். முருகன் 1,166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் 14 ஆவது சுற்றில் 1,166 வாக்குகள் பின்தங்கினார் பாஜக வேட்பாளர் எல்.முருகன்

Next Story