மாநில செய்திகள்

ஆனைக்கட்டி சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து வரும் கொரோனா நோயாளிகளால் தொற்று பரவும் அபாயம் - அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க கோரிக்கை + "||" + Risk of transmission of corona patients from Kerala through the Anaikkatti check post - request to appoint officers to monitor

ஆனைக்கட்டி சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து வரும் கொரோனா நோயாளிகளால் தொற்று பரவும் அபாயம் - அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க கோரிக்கை

ஆனைக்கட்டி சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து வரும் கொரோனா நோயாளிகளால் தொற்று பரவும் அபாயம் - அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க கோரிக்கை
ஆனைக்கட்டி சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து வரும் கொரோனா நோயாளிகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
துடியலூர்,

கொரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்ட நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அதன்படி பிறமாநிலங்களில் இருந்து வருபவர்க ளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியான பிறகே கேரளாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு தொற்று ஏற்பட்ட போது, தமிழக -கேரள எல்லையான ஆனைக்கட்டியில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. அங்கு போலீசார், சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து 3 சுற்றுகளாக பணியில் ஈடுபட்டனர். அவர்கள், கேரளாவில் இருந்து அனைத்து வாகனங்கள் மற்றும் நபர்களை தீவிர சோதனைக்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதித்து வந்தனர்.

ஆனால் தற்போது ஆனைக்கட்டியில் வனத்துறை சோதனைச்சாவடி மட்டும் உள்ளது. அங்கு பணியில் இருக்கும் வனத்துறையினர் மரக்கடத் தல் போன்ற வனக்குற்றம் தொடர்பாக மட்டுமே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் போலீசார் யாரும் இல்லை.

இதனால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் ஆட்களை யாரும் கண்காணிப்பது இல்லை. இதன் காரணமாக கேரளாவில் இருந்து கொரோனா நோயாளிகள் கோவைக்கு எளிதாக வந்து செல்லும் நிலை உள்ளது. இது கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது :-

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குள் நுழையும் போது தீவிர சோதனைக்கு உட்படுத்தி, இ- பாஸ் மற்றும் தொற்று இல்லை என்பதற்கான ஆவணங்களை சரிபார்த்த பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோவை வழியாக வருப வர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்க வேண்டும். அனைக்கட்டி சோதனைச்சாவடி வழியாக தமிழகத்துக்குள் நுழையும் கேரள பயணிகளை கண்காணிக்கவும், சோதனைக்கும் உட்படுத்தவும் வேண்டும். இதற்கு அந்த சோதனைச்சாவடியில் போதுமான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.