விராலிமலை உள்ளிட்ட சில தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திர வரிசை எண்களில் முரண்பாடு


விராலிமலை உள்ளிட்ட சில தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திர வரிசை எண்களில் முரண்பாடு
x
தினத்தந்தி 2 May 2021 7:29 PM GMT (Updated: 2 May 2021 7:29 PM GMT)

விராலிமலை உள்ளிட்ட சில தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திர வரிசை எண்களில் முரண்பாடு தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்.

சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தி.மு.க. வக்கீல் பிரிவைச் சேர்ந்த நீலகண்டன் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விராலிமலை தொகுதிக்கான வாக்குகளை எண்ணும் 6-ம் எண் மேஜையில் உள்ள முதல் சுற்றுக்கான கட்டுப்பாட்டு எந்திர எண் 4, 5 மற்றும் 14-ம் மேஜைகளில் 2-ம் சுற்றுக்கான கட்டுப்பாட்டு எந்திரத்தின் எண் ஆகியவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.எனவே மற்ற சுற்று எண்ணப்படும் வரை, அந்த எந்திரங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும்படி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரினோம். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.இதற்கிடையே தி.மு.க.வுக்கு பதிவான 4 ஆயிரம் ஓட்டுகள், அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு கிடைத்ததாக எண்ணப்பட்டன. அப்போது 3 ஆயிரம் ஓட்டுகளில் விஜயபாஸ்கர் முன்னிலை பெற்றிருந்தார். இதை அனுமதித்தால் வாக்கு எண்ணிக்கை முடிவை பாதிக்கும்.

எனவே அந்த தேர்தல் நடத்தும் அதிகாரியை இடமாற்றம் செய்யவும், புதிய தேர்தல் நடத்தும் அதிகாரியை வைத்து ஓட்டு எண்ணிக்கையை தொடர வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டியளித்த நீலகண்டன், தொண்டாமுத்தூர், பெருந்துறை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களின் வரிசை எண்ணில் முரண்பாடு உள்ளது என்றும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அலுவலர்கள் செயல்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

Next Story