மாநில செய்திகள்

ஒரு வாரத்துக்கு தேவையான ‘டோஸ்’ கையிருப்பு: தமிழகத்தில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 லட்சம் பேர் காத்திருப்பு + "||" + One-week 'dose' reserve: 45 lakh people waiting to be vaccinated for the second time in Tamil Nadu

ஒரு வாரத்துக்கு தேவையான ‘டோஸ்’ கையிருப்பு: தமிழகத்தில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 லட்சம் பேர் காத்திருப்பு

ஒரு வாரத்துக்கு தேவையான ‘டோஸ்’ கையிருப்பு: தமிழகத்தில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 2-வது தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்.
சென்னை, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. சுகாதாரத்துறையினர், காவல்துறை, உள்ளாட்சித்துறை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்புள்ளவர்கள் என படிப்படியாக ஒவ்வொரு பிரிவினருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் இணையதளத்தில் தடுப்பபூசிக்காக பதிவு செய்தனர். இதற்கு தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

2-வது தவணை தடுப்பூசி

அதன்படி, 1.50 கோடி தடுப்பூசிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் செய்தது. ஆர்டர் செய்த தடுப்பூசிகள் வராததால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி திட்டமிட்டபடி மே 1-ந்தேதி தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பிய 72.85 லட்சம் தடுப்பூசிகளில் 60 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வீணாகியது போக, ஒரு வாரத்துக்கு தேவையான சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. இதனால் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ள சுமார் 45 லட்சம் பேர் 2-வது தவணை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தமிழக அரசு ஆர்டர் செய்துள்ள 1.50 கோடி தடுப்பூசிகள் வந்ததும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். மேலும், மத்திய அரசிடம் இருந்தும் இன்னும் கூடுதலாக தடுப்பூசிகள் வரவுள்ளன” என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
2. பெரம்பலூரில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
3. முழு ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் கடைகள் அடைப்பு, சாலைகள் மூடப்பட்டன
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் மூடப்பட்டன. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. சாலைகளில் தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
4. கொரோனா நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட பெங்களூரு அணி திட்டம்
கொரோனா நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட பெங்களூரு அணி திட்டம்.
5. இந்தியாவில் கொரோனா சற்றே குறைந்தது; தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்தது; ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்தது. ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர்.