மாநில செய்திகள்

இதுவரை 14,346 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது + "||" + 14,346 deaths so far: Corona impact in Tamil Nadu exceeds 20,000

இதுவரை 14,346 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது

இதுவரை 14,346 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 14 ஆயிரத்து 346 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 20 ஆயிரத்து 768 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 37 ஆயிரத்து 224 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 12 ஆயிரத்து 375 ஆண்கள், 8 ஆயிரத்து 393 பெண்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 768 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 727 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரத்து 996 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 78 பேரும், செங்கல்பட்டில் 5 ஆயிரத்து 702 பேரும், கோவையில் ஆயிரத்து 441 பேரும், திருவள்ளூரில் ஆயிரத்து 49, மதுரையில் 880, தூத்துக்குடியில் 660, நெல்லையில் 630 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 86, கள்ளக்குறிச்சியில் 84, அரியலூரில் 60, பெரம்பலூரில் 29 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

12 லட்சம் பேர் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 25 லட்சத்து 61 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 12 லட்சத்து 7 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 150 ஆண்களும், 4 லட்சத்து 77 ஆயிரத்து 924 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 43 ஆயிரத்து 383 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 68 ஆயிரத்து 242 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 72 பேரும், தனியார் மருத்துவமனையில் 81 பேரும் என அதிகபட்சமாக 153 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

153 பேர் உயிரிழப்பு

அந்தவகையில் நேற்று சென்னையில் 29 பேரும், செங்கல்பட்டில் 16, காஞ்சீபுரத்தில் 13, சேலத்தில் 12, வேலூரில் 9, திருவள்ளூர், திருச்சியில் தலா 8 பேரும், மதுரையில் 7, கன்னியாகுமரி, தென்காசியில் தலா 6 பேரும், ராணிப்பேட்டையில் 5, கோவை, பெரம்பலூர், திருப்பத்தூர், நெல்லையில் தலா 3 பேரும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், தேனி, திருவண்ணாமலை, திருப்பூர், விருதுநகரில் தலா 2 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 29 மாவட்டங்களில் 153 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரத்து 346 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

17,576 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 17 ஆயிரத்து 576 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 5 ஆயிரத்து 702 பேரும், கோவையில் ஆயிரத்து 51, திருவள்ளூரில் 857, செங்கல்பட்டில் 850 பேரும் அடங்குவர். இதுவரையில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 576 பேர் குணமடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 444 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி, நம்பியூர் பகுதியில் 44 பேருக்கு கொரோனா
புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி, நம்பியூர் பகுதியில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. மேலும் 623 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 623 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.
3. ஒரே தெருவில் 5 பேருக்கு கொரோனா
வி.கைகாட்டி அருகே ஒரே தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அப்பகுதியில் கருவேல மரக்கிளைகளை போட்டு பாதைகள் அடைக்கப்பட்டது.
4. கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகினர். புதிதாக 319 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
5. ஒரே நாளில் 242 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.