அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டத்தை தடுக்க தவறியதால் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்டு்'


அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டத்தை தடுக்க தவறியதால் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு்
x
தினத்தந்தி 2 May 2021 10:10 PM GMT (Updated: 2 May 2021 10:10 PM GMT)

அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டத்தை தடுக்க தவறியதால் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்டு்' தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கமிஷனர் நடவடிக்கை.

சென்னை, 

கொரோனா பரவல் உள்ள பரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. கொரோனா வீரியம் காரணமாக தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இந்தநிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகித்ததையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திரண்ட தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி கட்சி நுழைவுவாயில் முன்பு அண்ணாசாலையில் நேற்று மதியம் பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.முரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தி.மு.க.வினரின் வெற்றி கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெறாமல் இருக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாமல் பணியில் கவன குறைவாக இருந்ததற்காக தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளியை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ‘சஸ்பெண்டு' செய்தார்.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் போலீஸ் கமிஷனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Next Story