மாநில செய்திகள்

நடிகர்கள் மயில்சாமி, மன்சூர் அலிகான் ‘டெபாசிட்’ இழந்தனர் திரை பிரபலங்கள் குஷ்பு, ஸ்ரீபிரியா ஜொலிக்கவில்லை சீமானுக்கு 3-வது இடம் + "||" + Actors Myilsami, Mansoor Ali Khan lost 'Deposit' Screen Celebrities Khushboo, Sripriya Shine Seeman 3rd Place

நடிகர்கள் மயில்சாமி, மன்சூர் அலிகான் ‘டெபாசிட்’ இழந்தனர் திரை பிரபலங்கள் குஷ்பு, ஸ்ரீபிரியா ஜொலிக்கவில்லை சீமானுக்கு 3-வது இடம்

நடிகர்கள் மயில்சாமி, மன்சூர் அலிகான் ‘டெபாசிட்’ இழந்தனர் திரை பிரபலங்கள் குஷ்பு, ஸ்ரீபிரியா ஜொலிக்கவில்லை சீமானுக்கு 3-வது இடம்
திரையில் பிரகாசித்த நட்சத்திரங்களான குஷ்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் தேர்தல் களத்தில் ஜொலிக்க முடியாமல் தோல்வியை தழுவினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு 3-வது இடமே கிடைத்தது. நடிகர்கள் மயில்சாமி, மன்சூர் அலிகான் ‘டெபாசிட்’ இழந்தனர்.
சென்னை, 

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளரான சீமான், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களம் இறங்கினார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சீமான், தோல்வி அடைந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

திரைப் பிரமுகர்கள்

இந்த தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய திரையுலக பிரமுகர்களாலும் ஜொலிக்க முடியவில்லை.

அந்தவகையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான நடிகை குஷ்பு, மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான நடிகை ஸ்ரீபிரியா, விருகம்பாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான கவிஞர் சினேகன் ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்தனர்.

‘டெபாசிட்’ இழந்த நடிகர்கள்

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் சொற்ப வாக்குகள் மட்டும் பெற்று படுதோல்வி அடைந்ததோடு, ‘டெபாசிட்‘ தொகையையும் இழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனாவின் தோல்வியை கிண்டல் செய்த அம்ருதா பட்னாவிஸ், நீலம் கோரே பதிலடி
பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனாவின் தோல்வியை விமர்சித்த தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிசுக்கு, நீலம் கோரே பதிலடி கொடுத்துள்ளார்.