அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தோல்வி


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தோல்வி
x
தினத்தந்தி 3 May 2021 12:10 AM GMT (Updated: 3 May 2021 12:10 AM GMT)

ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெற்றி வாய்ப்பை இழந்தார். தி.மு.க. வேட்பாளர் தங்கப்பாண்டியன் 2-வது முறையாக வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்து கொண்டார்.

விருதுநகர், 

ராஜபாளையம் தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார்.

இம்முறை ராஜபாளையம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கத்தில் நடிகை கவுதமி அங்கு முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

கடும் போட்டி

ஆனால் எதிர்பாராத வகையில் இத்தொகுதி அ.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொகுதி மாறி சிவகாசியில் இருந்து ராஜபாளையத்தில் போட்டியிட்டார்.

இதனால் தங்கப்பாண்டியன் இத்தொகுதியில் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ராஜபாளையம் தொகுதியில் 14 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட்ட நிலையில் ஒரு சில சுற்றுகளில் ராஜேந்திரபாலாஜியைவிட குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் இறுதியில் அதிக வாக்குகள் பெற்று ெவற்றி பெற்று தொகுதியை தங்கப்பாண்டியன் தக்க வைத்துக் கொண்டார்.

இதனால் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தோல் வியை தழுவினார்.

ராஜபாளையம் ெதாகுதியில் 1,78,156 வாக்குகள் பதிவாகின. இதில் நோட்டா 1,868. செல்லாதவை - 288.

இந்த தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் வருமாறு:-

தங்கப்பாண்டியன் (தி.மு.க.)-73,780.

கே.டி.ராஜேந்திர பாலாஜி (அ.தி.மு.க.) - 69,991.

காளிமுத்து (அ.ம.மு.க.)- 7,623.

விவேகானந்தன் (மக்கள் நீதி மய்யம்)- 4,035.

ஜெயராஜ் (நாம் தமிழர் கட்சி)- 15,483.

Next Story