மாநில செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் மரணத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி + "||" + The AIADMK has won the much-anticipated Srivilliputhur constituency over the death of a Congress candidate. Success

காங்கிரஸ் வேட்பாளர் மரணத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி

காங்கிரஸ் வேட்பாளர் மரணத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி
காங்கிரஸ் வேட்பாளர் மரணத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றார்.
விருதுநகர், 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் 15 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

இந்த தொகுதியானது தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால், காங்கிரஸ் சார்பில் மாதவராவ் (வயது 63) வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அ.தி.மு.க. சார்பில் மான்ராஜ் போட்டியிட்டார்.

தீவிரமாக பிரசாரம் செய்து வந்த வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதைத்தொடர்ந்து மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கு அடுத்த சில நாட்களில் மாதவராவ் உயிரிழந்தார்.

இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றால், அந்த தொகுதி மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததால், இந்த தொகுதியின் தேர்தல் முடிவு தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது.

அ.தி.மு.க. வெற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் நேற்று விருதுநகரில் உள்ள மையத்தில் எண்ணப்பட்டன.

தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் மான்ராஜ் முன்னணியில் இருந்தார். 2-வது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வந்தார். சுற்றுக்கள் முடிய, முடிய இவர்கள் 2 பேருக்குமான ஓட்டுகள் வித்தியாசம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

26 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 12 ஆயிரத்து 738 ஓட்டுகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றார். அவர் 70 ஆயிரத்து 475 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் 57 ஆயிரத்து 737 ஓட்டுகள் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
2. திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மடிக்கணினியுடன் சுற்றித்திரிந்த 2 பேரால் பரபரப்பு தேர்தல் அதிகாரியிடம் கே.என்.நேரு புகார்
திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மடிக்கணினியுடன் சுற்றித்திரிந்த 2 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களால் வாக்குகள் மாற்றம் செய்திருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு புகார் தெரிவித்துள்ளார்.
3. மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி பிரசாரம் திடீர் ரத்து
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீரென ரத்து செய்துள்ளார்.
4. தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு
தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு.
5. அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் பயங்கரம் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை
அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.