மாநில செய்திகள்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் மாபெரும் வெற்றி: தாத்தாவை மிஞ்சிய பேரனாக உதயநிதி ஸ்டாலின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார் + "||" + Great victory in Chepauk-Tiruvallikeni: Udayanithi Stalin as the grandson who surpassed his grandfather by a large margin

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் மாபெரும் வெற்றி: தாத்தாவை மிஞ்சிய பேரனாக உதயநிதி ஸ்டாலின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் மாபெரும் வெற்றி: தாத்தாவை மிஞ்சிய பேரனாக உதயநிதி ஸ்டாலின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்
தனது தாத்தாவை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றும், அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தாத்தாவை மிஞ்சிய பேரனாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முத்திரை பதித்துள்ளார்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக இந்த தேர்தலில் களம் கண்டார். தனது தாத்தாவும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அவர் போட்டியிட்டார். இதன்மூலம் தனது தாத்தா போட்டியிட்ட தொகுதியில் இருந்தே தனது தேர்தல் அத்தியாயத்தை அவர் தொடங்கினார்.

68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்

ஆனால் களம் கண்ட முதல் தேர்தலிலேயே அவர் பெருவாரியான வாக்குகள் பெற்று அசத்தி இருக்கிறார். இந்த தேர்தலில் அவர் மொத்தம் 91 ஆயிரத்து 776 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை விட 68 ஆயிரத்து 133 வாக்குகள் கூடுதலாக பெற்று வாகை சூடியிருக்கிறார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி முதல்முறையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் 35 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2001-ம் ஆண்டு தேர்தலில் 4 ஆயிரத்து 834 வாக்குகள் வித்தியாசத்திலும், 2006-ம் ஆண்டு தேர்தலில் 8 ஆயிரத்து 526 வாக்குகள் வித்தியாசத்திலும் கருணாநிதி தொடர்ந்து வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு தேர்தலில் 50 ஆயிரத்து 249 வாக்குகள் வித்தியாசத்திலும், 2016-ம் ஆண்டு தேர்தலில் 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்திலும் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி தொடர்ந்து வெற்றி பெற்றார்.

தற்போது தனது தாத்தாவை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றும், அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தாத்தாவை மிஞ்சிய பேரனாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முத்திரை பதித்துள்ளார்.

ஓட்டு விவரம்

மொத்த வாக்குகள்:- 2,34,038

பதிவானவை:-1, 35,417

1.உதயநிதி ஸ்டாலின்(தி.மு.க.) - 91776

2.ஏ.வி.ஏ.கசாலி (பா.ம.க.) - 23643

3.கே.முகமது இத்ரீஸ் (இந்திய ஜனநாயக கட்சி) - 4066

4.எஸ்.எம்.ஜெயசிம்மராஜா (நாம் தமிழர்) - 9129

5.எல்.ராஜேந்திரன்

(அ.ம.மு.க.) - 1852

6.சி.ராகு (பகுஜன் சமாஜ்) - 707

7.அபித் பக் ஷோ எச்.உசேன் (இந்திய குடியரசு கட்சி அத்வாலே) - 103

8.எம்.எல்.ரவி (தேசிய மக்கள் சக்தி கட்சி) - 89

9.டபேரீஸ் (திப்பு சுல்தான் காட்சி) - 364

10.முகமது ரியாஸ் (அனைத்து மக்கள் அரசியல் கட்சி) - 112

11.கே.ஆனந்தன் (சுயே) - 87

12.சி.கண்ணன் (சுயே) - 63

13.பி.கணேசன் (சுயே) - 39

14.எஸ்.கிருஷ்ணதாசன்

(சுயே) - 57

15.எஸ்.சந்திரநாதன் (சுயே) - 115

16.ஸ்ரீநிவாசன் (சுயே) - 138

17.எச்.செந்தில்குமார்(சுயே) - 241

18.பி.டில்லிராஜ் (சுயே) - 49

19.நாகராஜன் (சுயே) -108

20.கே.பாலாஜி (சுயே) -34

21.சி.பாலாஜி (சுயே) -52

22.இ.மணிகண்டன் (சுயே) -48

23.டி.மதனகோபால் (சுயே) -41

24.முகமதுஉசேன் (சுயே) -33

25.முனியாண்டி (சுயே) -81

26.இ.ரவி (சுயே) -352

27.நோட்டா-2038

செல்லாத வாக்குகள் - இல்லை.

(பா.ம.க. வேட்பாளர் ஏ.வி.ஏ.கசாலி தவிர மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்)

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.
2. தமிழகத்தில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி
தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
3. கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
4. காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி
காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார். அவர், கடைசி சுற்றுவரை போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
5. பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது.