மாநில செய்திகள்

சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து + "||" + wins Udayanithi Stalin victory in assembly elections DMK MP Kanimozhi greetings

சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து

சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுக்கு வந்துள்ளது. 

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 

இதனிடையே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சேப்பாக்கம் தொகுதியில் மிக சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். முதல் முறையாக பொறுப்பேற்கும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்” என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.




தொடர்புடைய செய்திகள்

1. 126 தொகுதிகளில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிறார் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
2. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
3. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் மாபெரும் வெற்றி: தாத்தாவை மிஞ்சிய பேரனாக உதயநிதி ஸ்டாலின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்
தனது தாத்தாவை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றும், அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தாத்தாவை மிஞ்சிய பேரனாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முத்திரை பதித்துள்ளார்.
4. சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் “ வெற்றி பெற்ற அமைச்சர்கள் மற்றும் தோல்வி அடைந்த அமைச்சர்கள்” முழு விவரம்
சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.