மாநில செய்திகள்

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து + "||" + Edappadi Palanisamy congratulates Stalin on taking charge as Tamil Nadu Chief Minister

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
2. முழு ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவை? முழு விவரம்
தமிழகத்தில் வரும் 24- ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ஊரடங்கு நீட்டிப்பா? தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
ஊரடங்கை நீட்டித்து தீவிரப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
4. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்- முதல்-அமைச்சர் வேண்டுகோள்
ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.