மாநில செய்திகள்

தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து + "||" + Elections come n go, good work must continue KhushbuSundar

தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து

தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு  குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை

தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கும் அதன் தலைவர் முக ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பூ, நல்ல பணி தொடர வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

திமுகவின் வேட்பாளர் டாக்டர் எழிலனை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜனதா சார்பில்போட்டியிட்ட நடிகை குஷ்பு  தோல்வியடைந்தார். இதன் பின் தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பூ, ”ஒவ்வொரு வெற்றியும் தோல்வியோடுதான் ஆரம்பமாகிறது. மக்களின் தீர்ப்பை அடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் எழிலன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

எது எப்படியோ, நான் தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன். அவர்களுடன் நிற்பேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். கடைசியில் மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் முடிவு பணிவோடு ஏற்கப்பட்டது என்று டுவீட் செய்து இருந்தார்.

இதன் பிறகு திமுகவின் டுவிட்டர் பக்கத்தையும், முக ஸ்டாலினின் டுவிட்டர் பக்கத்தையும் குறிப்பிட்டு டுவீட் செய்துள்ள குஷ்பு "நாம் ஒற்றுமையோடு நிற்போம். அழகிய மாநிலமான தமிழ்நாட்டை இன்னும் சிறப்பானதாக்க வரப்போகும் புதிய அரசுக்கு உதவுவோம். திமுக மற்றும் அதன் தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை தனது வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் முன்னெடுத்துச்ச்செல்வார் என்று நான் நம்புகிறேன். தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. “காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதிதாக பணியில் சேரும் 86 பயிற்சி துணை கண்காணிப்பாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
2. லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
3. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்
ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பிற கட்சியினர் தி.மு.கவில் இணைந்தனர்.
4. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
5. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.