சட்டசபை தேர்தல் - 2021

திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் + "||" + Which is the 3rd largest party in Tamil Nadu after DMK and AIADMK? Percentage of votes received by the parties

திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்

திமுக, அதிமுக அடுத்து  தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
சென்னை

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்  தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4 இடங்களில் வெற்றி பெற்று உள்ளன

அதிமுக கூட்டணி - 75 இடங்களில் வெற்றி அதிமுக - 65 பாமக - 5 பாஜக - 4 இதர கட்சிகள் - 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எங்கும் வெற்றி பெறவில்லை.

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்த நாம் தமிழர் கட்சி பல இடங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. நாம் தமிழர்தான் பல இடங்களில் மூன்றாவது இடம் பிடித்தது என்பதால் வாக்கு சதவிகித ரீதியாக அந்த கட்சி 3வது பெரிய கட்சியாக வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில்  .6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம்  கணிசமான வாக்குகளை கொங்கு மண்டலத்தில் பெற்றுள்ளது.  மக்கள் நீதி மய்யம் 2.4%, அமமுக 2.4% என்ற வாக்கு சதவிகிதத்தை பெற்று உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு விவகாரம் : சட்டசபையில் காரசார விவாதம் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் திமுக - அதிமுக எம்எல்ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
2. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
3. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.
4. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
5. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.