மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்த பெண்ணால் பரபரப்பு + "||" + The woman cut out her tongue and placed it on the doorstep of the temple

மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்த பெண்ணால் பரபரப்பு

மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்த பெண்ணால் பரபரப்பு
மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து பெண் ஒருவர் தனது நாக்கை அறுத்து கோவிலில் காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின்  வரும் மே 7 ஆம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்காக ஒரு பெண் தனது நாக்கை வெட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தனிப் பெரும்பாண்மையோடு திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் 50 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளதை அடுத்து திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32) இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டி கொண்டார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்  முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்த பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

1. 126 தொகுதிகளில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிறார் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
2. கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
3. மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
4. வாக்கு எண்ணும் இடங்களில் குவிய வேண்டாம்; ‘தேர்தல் வெற்றி செய்தி கேட்கும் நேரத்தில் வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்’; தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
வாக்கு எண்ணும் இடங்களில் குவிய வேண்டாம். தேர்தல் வெற்றி செய்தியை கேட்கும் நேரத்தில் வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடக்கிறது
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக நடக்க இருக்கிறது.