மாநில செய்திகள்

வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதயமார்ந்த நன்றி: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை - மு.க. ஸ்டாலின் + "||" + Heartfelt thanks to O. Panneerselvam for the greeting MK Stalin

வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதயமார்ந்த நன்றி: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை - மு.க. ஸ்டாலின்

வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதயமார்ந்த நன்றி: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை - மு.க. ஸ்டாலின்
வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதயமார்ந்த நன்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலையில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொலைபேசியில் என்னைத்தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதயமார்ந்த நன்றி. தமிழக மக்களின் வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனக்கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.