எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்


எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
தினத்தந்தி 3 May 2021 2:15 PM GMT (Updated: 3 May 2021 2:15 PM GMT)

எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.

சென்னை,

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி  பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்கள் குழுவின் ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். 

 புதிய அரசு பதவி ஏற்கும் வரை முதல்வர் பதவியில் தொடருமாறு ஆளுநர் அவருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 15 வது தமிழக சட்டப்பேரவையை கலைப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story