மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,952 பேருக்கு கொரோனா உறுதி: 18 ஆயிரத்து 016 பேர் ‘டிஸ்சார்ஜ்' + "||" + Tamil Nadu reports 20,952 new COVID-19 cases, 18,016 recoveries,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,952 பேருக்கு கொரோனா உறுதி: 18 ஆயிரத்து 016 பேர் ‘டிஸ்சார்ஜ்'

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,952 பேருக்கு கொரோனா உறுதி: 18 ஆயிரத்து 016 பேர் ‘டிஸ்சார்ஜ்'
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,952பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்றறைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 20,952 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 122 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,488-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 12,28,064 எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து 6-ம் நாளாக ஆறாயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 6,150 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் 10 லட்சத்து 90, ஆயிரத்து 338 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 18 ஆயிரத்து 016 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.