கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை - உதயநிதி ஸ்டாலின் டுவீட்


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை -  உதயநிதி ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 3 May 2021 3:31 PM GMT (Updated: 3 May 2021 3:31 PM GMT)

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோய் பரவலை தடுத்திட உதவி வேண்டும் என்று அந்த டுவிட்டில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.


சென்னை,

தமிழகத்தின் அடுத்த ஆட்சியை திமுக ஆட்சி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு அதிகாரிகளுடன் முதல்வராக பதவி ஏற்க உள்ள மு.க. ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார் என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாக உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலினின் டுவிட்டை அவர் ரீடுவிட் செய்துள்ள நிலையில் அந்த டுவிட்டில் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்புடன் நடைபெற்ற வலியுறுத்தினேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோய் பரவலை தடுத்திட உதவி வேண்டும் என்று அந்த டுவிட்டில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். 

இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைராலாகி உள்ளது. 

Next Story