மாநில செய்திகள்

முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து + "||" + Edappadi Palanisamy and O. Panneerselvam congratulate MK Stalin on taking over as First Minister

முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலினும் அதற்கு நன்றி தெரிவித்தார்.
சென்னை, 

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்’’ என்று கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

அதேபோல, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “ஓ.பன்னீர்செல்வம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தி.மு.க. அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவரது ஒத்துழைப்பும் தேவை என கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.
2. மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 'கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம்'
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
3. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
4. மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
5. ஐகோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வாக்கு எண்ணிக்கையின்போது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வாக்கு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.