மாநில செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு? இந்திய தேர்தல் ஆணையம் தகவல் + "||" + What is the percentage of votes received by political parties in the Tamil Nadu Assembly elections? Election Commission of India Information

தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு? இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு? இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு? என்பது பற்றிய தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது.

இந்த தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கட்சிகள் பெற்ற இடங்கள்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அ.தி.மு.க. 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 133 இடங்களில் (தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களும் சேர்த்து) வெற்றி பெற்றுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் 18 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலா 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 4 இடங்களிலும், பா.ம.க. 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தி.மு.க. சதவீதம்

தேர்தல் கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்ட இந்திய தேசிய முஸ்லீம் லீக், த.மா.கா., மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு விவரங்களையும் அதன் சதவீதமும் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள 6.28 கோடி வாக்காளர்களில் இந்தத் தேர்தலில் 4.57 கோடி பேர் வாக்களித்தனர். இதில் தி.மு.க., ஒரு கோடியே 74 லட்சத்து 30 ஆயிரத்து 100 ஓட்டுகள் பெற்றுள்ளது. அதன்படி தி.மு.க. 37.70 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது.

மற்ற கட்சிகள்

அ.தி.மு.க. - 1 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரத்து 974 வாக்குகள் - 33.29 சதவீதம்.

பா.ம.க. - 17 லட்சத்து 58 ஆயிரத்து 774 ஓட்டுகள் - 3.80 சதவீதம்.

பா.ஜ.க. - 12 லட்சத்து 13 ஆயிரத்து 510 ஓட்டுகள் - 2.62 சதவீதம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி - 5 லட்சத்து 4 ஆயிரத்து 537 ஓட்டுகள்- 1.09 சதவீதம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி - 3 லட்சத்து 90 ஆயிரத்து 819 ஓட்டுகள்-0.85 சதவீதம்.

தே.மு.தி.க. - 2 லட்சத்து 156 ஓட்டுகள் - 0.43 சதவீதம்.

காங்கிரஸ் - 19 லட்சத்து 76 ஆயிரத்து 527 ஓட்டுகள் - 4.3 சதவீதம்.

ஐ.யு.எம்.எல். - 2 லட்சத்து 22 ஆயிரத்து 263 ஓட்டுகள் - 0.48 சதவீதம்.

மற்ற கட்சிகள் - 66 லட்சத்து 84 ஆயிரத்து 174 ஓட்டுகள் - 14.5 சதவீதம்.

நோட்டா

இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கவில்லை என்ற நோட்டாவிற்கு 3 லட்சத்து 45 ஆயிரத்து 538 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது 0.75 சதவீதமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் படுக்கை வசதி அறிய புதிய ஆன்-லைன் வசதி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
ரெம்டெசிவிர் மருந்துகளை பரவலாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அரசு-தனியார் ஆஸ்பத்திரிகள் படுக்கை வசதி அறிய புதிய ஆன்-லைன் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
2. பொதுமக்கள் தேடி அலைய வேண்டாம்: ‘ரெம்டெசிவிர்’, உயிர்காக்கும் மருந்து இல்லை பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து இல்லை எனவும், அதனை பொதுமக்கள் வெளியே தேடி அலைய வேண்டாம் எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
3. மறு அறிவிப்பு வெளியிடும் வரை ஆசிரியர்கள் 1-ந்தேதி முதல் பள்ளிக்கூடம் வர தேவையில்லை பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
மறு அறிவிப்பு வெளியிடும் வரையில் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறை எண்கள் கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறை எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
5. சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.