பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்


பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்
x
தினத்தந்தி 3 May 2021 9:00 PM GMT (Updated: 3 May 2021 9:00 PM GMT)

பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்.

தஞ்சாவூர், 

கடந்த 1967-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது அண்ணா தலைமையில் தி.மு.க. களம் இறங்கியது. அப்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மு.கிரு‌‌ஷ்ணமூர்த்தி போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைரவன் சேர்வையை 9 ஆயிரத்து 118 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர் பேராவூரணி தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பேராவூரணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மு.கிரு‌‌ஷ்ணமூர்த்தியின் மருமகன் அசோக்குமார் போட்டியிட்டு இருந்தார். (மு.கிரு‌‌ஷ்ணமூர்த்தியின் மகளைத்தான் அசோக்குமார் திருமணம் செய்துள்ளார்). நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது, அசோக்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் திருஞானசம்பந்தத்தை விட 23 ஆயிரத்து 503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தனது மாமனார் வென்ற தொகுதியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு மருமகன் வெற்றி பெற்று பேராவூரணி தொகுதியை தி.மு.க. வசப்படுத்தியுள்ளார்.



Next Story