மாநில செய்திகள்

முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து + "||" + Political leaders congratulate MK Stalin on his inauguration as First Minister

முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் எனது மகிழ்வான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழக மக்களின் உயர்வுக்கு தாங்கள் எடுக்கும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க.வின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘எங்களது கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நல் வாழ்த்துக்கள். மேலும் புதிதாக அரசமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் தி.மு.க.வுக்கும், அதன் தலைமைக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்து உள்ளார்.

ஏ.சி.சண்முகம்

இதே போன்று, புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அருந்ததி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் வலசை ரவிச்சந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் செந்தில் தொண்டைமான், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் எம்.முகமது சேக் அன்சாரி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், நாடார் சமுதாய அரசியல் உரிமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சந்திரன் ஜெயபால், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்துரமேஷ் நாடார், திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான், ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் ஜனார்த்தனன், தமிழ்க்கவிஞர் பெருமன்ற பொதுச்செயலாளர் பொன்னடியார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச.மயில், சத்துணவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அ.நூர்ஜஹான், டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) தலைவர் நா.பெரியசாமி, இந்திய படைப்பாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க தலைவர் மயிலவேலன், ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொதுச்செயலாளர் ஆ.மோகன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையான வெற்றி: மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி வாழ்த்து
சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையான வெற்றியை பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு, ஆர்.ஆர்.கோபால்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலினும் அதற்கு நன்றி தெரிவித்தார்.
3. மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 'கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம்'
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
4. மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
5. மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், ‘‘தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தொய்வின்றி நிறைவேற்றப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.