மாநில செய்திகள்

விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி + "||" + Vote count in Vidya Vidya: O. Panneerselvam wins in Bodi constituency

விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி

விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி
போடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அதிக வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
தேனி, 

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 3-வது முறையாக அவர் போடி தொகுதியில் மீண்டும் களம் இறங்கினார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் உள்பட மொத்தம் 24 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

போடி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. ஆரம்பம் முதலே வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடந்தது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர், முடிவை அறிவிப்பதிலும், அடுத்த சுற்றை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.

அதிகாலை அறிவிப்பு

நள்ளிரவு 12 மணி வரை 22 சுற்றுகள் மட்டுமே எண்ணப்பட்டு இருந்தன. 23-வது சுற்று தொடங்கிய போது வாக்கு எண்ணுவதற்காக எடுத்து வந்த ஒரு வாக்கு எண்ணும் எந்திரம் பழுதானது. இதனால் அந்த சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவை நிறுத்தி வைக்கக்கோரி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் சுமார் 1 மணி நேரம் வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி விவரம் அதிகாலை 4 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இதில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இதன்மூலம் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இந்த தொகுதியில் முதல் முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் அவர் மட்டுமே. தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்றார். இதையடுத்து காலை 5 மணியளவில் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அப்போது அவருடைய மகனும், தேனி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத் உடன் இருந்தார்.

விராலிமலை, திருமங்கலம் தொகுதி

இதேபோல ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் விராலிமலை தொகுதி வாக்கு எண்ணிக்கை விடிய, விடிய நடந்தது. நேற்று காலை 9.45 மணி அளவில் தான் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் 23,598 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் பழனியப்பனை தோற்கடித்து அ.தி.மு.க. வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்.

திருமங்கலம் தொகுதியிலும் நேற்று அதிகாலை வரை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் மணிமாறனை 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்
பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்.
2. அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி: “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்”
அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3. சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. 126 தொகுதிகளில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிறார் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
5. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.