மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடரானதுதான் அ.தி.மு.க. தோற்க காரணம் ப.சிதம்பரம் பேட்டி + "||" + Edappadi Palanisamy is a disciple of the BJP. The reason for the defeat was the interview with P. Chidambaram

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடரானதுதான் அ.தி.மு.க. தோற்க காரணம் ப.சிதம்பரம் பேட்டி

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடரானதுதான் அ.தி.மு.க. தோற்க காரணம் ப.சிதம்பரம் பேட்டி
எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடரானதுதான் அ.தி.மு.க. தோற்க காரணம் என ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று செம்மையான ஆட்சியை, திறமையான நிர்வாகத்தை தர எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய அரசின் அதிகார பலம், பண பலம், பாரதப்பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் இணைந்து தொடர்ந்து தொடுத்து வந்த உக்கிரமான போர் என எல்லாவற்றையும் எதிர்த்து தன்னந்தனியாக போராடி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மம்தா பானர்ஜிக்கும். அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுகள்.

வாக்கு வித்தியாசம்

அசாம் காங்கிரசில் மூத்த தலைவர்கள் இல்லாவிட்டாலும் இரண்டாவது தலைமுறையினர் சிறப்பாக பணியாற்றி பெரும் சவால்களுக்கு இடையே நல்ல இடங்களை கைப்பற்றி உள்ளனர்.

கேரளாவில் காங்கிரசுக்கு பெரிய தோல்வி போல சித்தரிக்கப்படுகிறது. தோல்வியை மறுக்கவில்லை. ஆனால் வாக்கு வித்தியாசம் 0.8 சதவீதமே.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தேர்தல் செயல்பாடுகளில் குறைவாகவோ, எதிராகவோ செயல்பட்டவர்களை கண்டறிந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

அ.தி.மு.க. தோல்விக்கு காரணம்

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடராக மாறி விட்டார். அதுவே அவரது கட்சியின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.

விவசாயிகள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் போராட்டத்தை முடிக்க மாட்டார்கள். பொல்லாத வேளாண் சட்டங்களை விலக்கிக்கொண்டு விவசாயிகள், எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசித்து விவசாயிகளுக்கு தேவையான ஆதரவான புதிய சட்டம் கொண்டு வந்தால் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்: பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தார். இதனால் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி.
3. கொரோனா ஒழிப்பில் மிகப்பெரிய தோல்வி: மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்க தொடங்கிவிட்டனர் - ப.சிதம்பரம் பேட்டி
கொரோனா ஒழிப்பில் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளதால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்க தொடங்கிவிட்டதாக ப.சிதம்பரம் கூறினார்.
4. ரூ.400 முதல் ரூ.1,000 வரை விலை நிர்ணயித்து தடுப்பூசி நிறுவனங்களின் லாபத்துக்கு வழிவகுப்பதா? சுகாதார அமைச்சகம் பதில் அளிக்க ப.சிதம்பரம் வலியுறுத்தல்
ரூ.400 முதல் ரூ.1,000 வரை விலை நிர்ணயித்து தடுப்பூசி நிறுவனங்களின் லாபத்துக்கு வழிவகுப்பதா? சுகாதார அமைச்சகம் பதில் அளிக்க ப.சிதம்பரம் வலியுறுத்தல்.
5. வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான 1-ந்தேதி தபால் ஓட்டுகள் எண்ண வாய்ப்புள்ளதா? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான 1-ந்தேதி தபால் ஓட்டுகள் எண்ணப்படுமா? என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் கூறியுள்ளார்.