அ.தி.மு.க. தோல்வி எதிரொலி: முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா


அ.தி.மு.க. தோல்வி எதிரொலி: முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா
x
தினத்தந்தி 3 May 2021 10:09 PM GMT (Updated: 3 May 2021 10:09 PM GMT)

எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் 2-ந் தேதி எண்ணப்பட்டன. எடப்பாடி தொகுதியில் இருந்த எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க. கட்சி தோல்வி அடைந்தது.

அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை எடப்பாடியில் இருந்து முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரிக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைத்தார்.

அவரது ராஜினாமா கடிதம், கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜினமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

சட்டசபை கலைப்பு

கவர்னர் மாளிகையான ராஜ்பவன் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்படுகிறது. 3-ந் தேதி (நேற்று) பிற்பகலில் இருந்து இந்த கடிதம் செயல்பாட்டுக்கு வருகிறது.

மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தற்போதுள்ள அமைச்சரவையே நீடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொண்டுள்ளேன். அதோடு, தற்போதுள்ள 15-வது சட்டசபையை கவர்னர் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story