லண்டனில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்


லண்டனில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்
x
தினத்தந்தி 4 May 2021 3:26 AM GMT (Updated: 4 May 2021 3:26 AM GMT)

லண்டனில் இருந்து விமானம் மூலம் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகம் வந்தடைந்தன.

சென்னை, 

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது அலை கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகள் உதவ முன் வந்துள்ளன. 

இந்நிலையில் லண்டனில் இருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் 46.6 லிட்டர் திறன் கொண்ட 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று அதிகாலை தமிழகம் வந்தடைந்தன. 

முன்னதாக குவைத்திலிருந்து 282 சிலிண்டர்கள், 60 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களைக் கொண்டு வந்த விமானம் இன்று காலை இந்தியா வந்தடைந்து. 


Next Story