மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் நேரில் வாழ்த்து + "||" + Officials congratulate MK Stalin on his inauguration as the Chief Minister of Tamil Nadu

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் நேரில் வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் நேரில் வாழ்த்து
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க திமுக தலைவர் ஸ்டாலினை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஸ்டாலினுக்கு மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குநர் பிரபு சங்கர், முதலைமைச்சரின் தனி செயலாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். திமுக நிர்வாகிகளான கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.