மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 19,112 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் + "||" + In Tamil Nadu today alone 19112 people have recovered from corona infection

தமிழகத்தில் இன்று மட்டும் 19,112 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று மட்டும் 19,112 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 19,112 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,40,512 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,49,292 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 11,09,450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 19,112 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 144 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,612 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,25,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று 6,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,222 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,608 பேர், கடலூரில் 1,509 பேர், திருவள்ளூரில் 1,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது.
2. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
பிரேசிலில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.45 கோடியாக அதிகரித்துள்ளது.