மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு + "||" + MK Stalin unanimously elected as the Chairman of DMK Legislative Assembly

தமிழக சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு

தமிழக சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த வெற்றியின் மூலம் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 125 திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 கூட்டணி கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களால், தமிழக சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வரும் மே 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின், அந்த உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தோடு, நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார்.