மாநில செய்திகள்

உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கும்: பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்ப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு + "||" + Rights and Privileges Available: Newspaper and Media Personnel Added to the Frontline Staff List - MK Stalin's Announcement

உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கும்: பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்ப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கும்: பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்ப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பத்திரிகை, காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள், காவல் துறை, உள்ளாட்சி துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறையை சேர்ந்தவர்கள் முன்களப் பணியாளர்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உரிமைகளும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பத்திரிகை, காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோரும் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு 4-வது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.

செய்தித்தாள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீமானின் தந்தை மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை யா.செந்தமிழன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
2. கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம்: ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் இருப்பை மேலும் அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மு.க.ஸ்டாலின் தகவல்
ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் இருப்பை மேலும் அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
3. “மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்” உலகத் தமிழர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மக்களின் உயிர்காக்கஉதவிக்கரம் நீட்டுங்கள் என்று உலகத் தமிழர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. கடலூரில் அமோனியா பாய்லர் வெடித்து 4 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி மு.க.ஸ்டாலின் உத்தரவு
கடலூரில் அமோனியா பாய்லர் வெடித்து 4 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
5. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட வெளிநாடுகளில் இருந்து தடு்ப்பூசி இறக்குமதி கொரோனா தடுப்பு பணியில் மு.க.ஸ்டாலின் தீவிரம்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக ெவளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வதற்காக உலகளாவிய டெண்டர் கோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.