மாநில செய்திகள்

“கொரோனா பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்” மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் + "||" + MK Stalin's request: "Let's turn the corona spread prevention into a people's movement."

“கொரோனா பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்” மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

“கொரோனா பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்” மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
“கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்” என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துக்கொள்கிறேன்.

கொரோனா 2-வது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக இருக்கிறது. பரவல் என்பது, முதல் அலையை விட கூடுதலாக உள்ளது. அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த துயர்மிகு நிலையை மக்கள் அனைவரும் முதலில் உணர வேண்டும்.

எச்சரிக்கை

அதிலும் குறிப்பாக, வடமாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன. அங்கு நூற்றுக்கணக்கான மரணங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்தநிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், மக்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல, அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறேன். இதனை மனதில் கொண்டு தமிழக அரசின் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

விரிவான ஆணை

இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் 20-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசு அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். பஸ் போக்குவரத்தும் 50 சதவீத பயணிகளுடன் இயங்கும். பயணிகள், இச்சூழலில், பஸ் போக்குவரத்தை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கூட்டமாக நிற்பது, நெருங்கி நிற்பது ஆகியவற்றை தவிர்க்கவும்.

மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கலாம். மருந்து, பால் போன்ற அத்தியாவசியப் பொருள் வழங்கல் இதனுள் வராது. உணவகங்களில் வாங்கிச் செல்லுதல் சேவை மட்டும் இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் விரிவான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை மீறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் இயக்கம்

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்கள் நன்மைக்காக போடப்படுபவைதான் என்பதை மக்களே உணர்ந்து கொண்டுள்ளார்கள். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை துண்டிக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது. அத்தகைய சங்கிலியை துண்டிக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பது என்பது, வேகமான கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடும். அதனால் அரசின் கட்டுப்பாடுகளை, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளாக இல்லாமல் மக்கள் தங்களுக்கு தாங்களே போட்டுக்கொள்ளும் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி செயல்பட்டால் மட்டுமே, நம் பாதுகாப்பை உறுதி செய்திட இயலும்.

முக கவசம் அணிய வேண்டும்

நோய் பரவாமல் தடுத்தல் - நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களை காப்பாற்றுதல் ஆகிய 2 குறிக்கோள்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. நோய்த்தொற்றுக்கு ஆளானவர் களை காப்பாற்றுதல் என்பது அரசின் பணி என்றால், நோய் பரவாமல் தடுத்தல் என்பது அரசுடன் மக்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியாகும்.

அவசர, அவசியம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்கவும். அப்படியே வெளியில் வந்தாலும் முக கவசம் அணியவும்; மூக்கையும் வாயையும் மூடியிருப்பது போல முக கவசம் அணிவது அவசியம். பேசுகிறபோதும், பணியிலிருக்கும் போதும் முக கவசம் கட்டாயம். குளிர்சாதன அறைக்குள் இருப் பவர்கள் ஜன்னல்களை திறந்து வைத்திருப்பது அவசியம். கிருமி நாசினி திரவங்களை அடிக்கடி பயன்படுத்தவும். கபசுர குடிநீரை அருந்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்த காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளவும். நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கும்: பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்ப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பத்திரிகை, காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2. அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி: “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்”
அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி: கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். தயாளு அம்மாளிடமும் ஆசி பெற்றார்.
4. மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்த பெண்
மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து பெண் ஒருவர் தனது நாக்கை அறுத்து கோவிலில் காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. 126 தொகுதிகளில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிறார் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.