மாநில செய்திகள்

மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தகவல் + "||" + Sterlite plant management informed that oxygen production will start once the power connection is provided

மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தகவல்

மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தகவல்
மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தகவல்.
தூத்துக்குடி, 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு சார்பில் கடந்த 29-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவும் அமைத்து அரசு உத்தரவிட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தேவையான அனுமதிகளை வழங்கினர். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆய்வுகளை நடத்தினர். ஆனால், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டதும் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளை தொடங்க தயாராக இருக்கிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு? இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு? என்பது பற்றிய தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
2. நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை
அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
3. அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் படுக்கை வசதி அறிய புதிய ஆன்-லைன் வசதி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
ரெம்டெசிவிர் மருந்துகளை பரவலாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அரசு-தனியார் ஆஸ்பத்திரிகள் படுக்கை வசதி அறிய புதிய ஆன்-லைன் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
4. பொதுமக்கள் தேடி அலைய வேண்டாம்: ‘ரெம்டெசிவிர்’, உயிர்காக்கும் மருந்து இல்லை பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து இல்லை எனவும், அதனை பொதுமக்கள் வெளியே தேடி அலைய வேண்டாம் எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
5. மறு அறிவிப்பு வெளியிடும் வரை ஆசிரியர்கள் 1-ந்தேதி முதல் பள்ளிக்கூடம் வர தேவையில்லை பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
மறு அறிவிப்பு வெளியிடும் வரையில் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.