மாநில செய்திகள்

கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன + "||" + There were moss beads in the clay found with the lid in the excavation below

கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன

கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன
கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழடியில் ஏற்கனவே பாசி, மணிகள், மண்பாண்ட ஓடுகள், சிறிய,பெரிய பானைகள் சேதமுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மேலும் தாயக்கட்டை, கல்லாலான விவசாய கருவி, காதில் அணியும் தங்க ஆபரண வளையம் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டபோது ஒரு குழியில் முழுமையான சிறிய பானை மூடியுடன் சேதாரமில்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாசி மணிகளும் அதில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளன.

மற்றொரு குழியில் கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்ட பல வகையான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பார்ப்பதற்கு சிறிய வாய்க்கால் போல் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொற்கை அகழாய்வில் திரவ பொருள் வடிகட்டும் 9 அடுக்கு குழாய் கண்டுபிடிப்பு
கொற்கை அகழாய்வில் திரவ பொருள் வடிகட்டும் 9 அடுக்கு குழாய் கண்டுபிடிப்பு.
2. கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
3. கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு
தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கீழடியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
4. கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி - முன்னோர்கள் பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு
கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது, நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5. கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி: சிறிய மண்பானைகள், கிண்ணங்கள் கண்டெடுப்பு
மதுரை அருகே உள்ள கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய-மாநில அரசுகளின் தொல்லியல்துறை சார்பில் ஏற்கனவே 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.