கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 4 May 2021 11:46 PM GMT (Updated: 4 May 2021 11:46 PM GMT)

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஓமியோபதி சிறப்பு மருத்துவமனை அமைக்கக்கோரி வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம் ஆகியவை மக்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ உதவுகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.

அலோபதி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய-மாநில அரசுகள், சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

தற்போது கொரோனா பரவல் தீவிரமாகியிருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story