மாநில செய்திகள்

மே 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + May 04: Petrol and diesel prices rise for the second day

மே 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

மே 05: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது.
சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 

நாடு முழுதும் வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. இதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.55 ரூபாய், டீசல் லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. (17 நாட்களுக்குப் பிறகு நேற்று விலை உயர்த்தப்படிருந்தது)

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன்படி இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும்: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும், ஏழை குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
2. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
3. வரலாறு காணாத உச்சம்; ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100 ஆக உயர்வு
எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்துள்ளது.
5. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; பா.ஜனதா அறிவுறுத்தல்
காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என பா.ஜனதா அறிவுறுத்தி உள்ளது.