மாநில செய்திகள்

திருச்சியில் வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து + "||" + Auto parts store fire in Trichy

திருச்சியில் வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து

திருச்சியில் வாகன உதிரிபாக  கடையில் தீ விபத்து
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி

திருச்சி ஒத்தக்கடை பகுதியில் பாரதிதாசன் சாலையில் வாகன உதிரிபாக விற்பனைக் கடை உள்ளது. கார்களுக்கான உதிரிபாகங்கள் விற்கும்  கடை  ஒன்றில்;  இன்று அதிகாலை காலை 5.30 மணியளவில் கரும் புகை வெளியேறியது.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திருச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மளமளவெனத் தீ கடை முழுவதும் பரவிவிட்டது. மேலும், அருகில் உள்ள பேக்கரி, ஆட்டோமொபைல் கடைகலுக்கும் தீ பரவியது. இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தகவலறிந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 5 மணிந் ஏரம் போராடி  தீயை அணைத்தனர். தீ விபத்தில் வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேலும், பேக்கரி மற்றும் ஆட்டோமொபைல் கடைகளிலும் தீ விபத்தால் சேதம் அடைந்தன.

இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பட்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து
குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
2. மராட்டியம்: ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 15 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. மராட்டியத்தில் தீ விபத்து: 7 பேர் பலி; 10 பேர் மாயம்
மராட்டியத்தின் புனே நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
4. பூட்டி கிடந்த அச்சகத்தில் தீ விபத்து
சிவகாசியில் பூட்டி கிடந்த அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
5. புகளூர் காகித ஆலை துணை மின் நிலையத்தில் திடீர் தீ
புகளூர் காகித ஆலை துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.