மாநில செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்? மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி + "||" + Why still sell alcohol that kills the immune system? I-Court question to Central-State Governments

நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்? மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி

நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்? மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
“நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுவை இன்னும் விற்பனை செய்வது ஏன்?” என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மதுரை, 

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2-ம் அலை தீவிரமாக பரவி வருவதால் கோவில்களில் தரிசனம், விழாக்கள் என மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மது அருந்துவதால் வைரஸ்களை அழிக்க முடியாது. மது குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்றும், கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் பொது இடங்களில் ஒரு மீட்டர் இடைவெளியை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை டாஸ்மாக் கடைகளில் கடைபிடிக்கப்படுவது இல்லை.

நீதிபதிகள் கேள்வி

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும். மேலும் கொரோனா தொற்று பரவல் முழுமையாக குறையும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபானங்கள் விற்பனையை இன்னும் அனுமதிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அரசு முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமானது குறித்து வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமானது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. தனியார் ஆஸ்பத்திரிகள் மீதான புகாரை முறையாக கையாள வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீதான புகாரை முறையாக கையாள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்றும், புராதன கோவில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுமா? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுமா? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.