அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் சாவு: டாக்டர் ராமதாஸ், சீமான் இரங்கல்


அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் சாவு: டாக்டர் ராமதாஸ், சீமான் இரங்கல்
x
தினத்தந்தி 6 May 2021 8:13 PM GMT (Updated: 6 May 2021 8:13 PM GMT)

அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்திருப்பதற்கு டாக்டர் ராமதாஸ், சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

திருப்பத்தூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முழு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும். மூடு... மூடு... மூடு... தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடமாநிலங்களில் நிகழ்வது போல, தமிழகத்திலும் உயிர்க்காற்றான ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழந்து வரும் செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 11 நோயாளிகளும், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 4 நோயாளிகளும் உயிர்க்காற்றின்றி மரணித்த செய்தியானது பெரும் அச்சத்தையும், கவலையையும் தருகிறது.

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் மற்றும் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்ற மருந்துகள், படுக்கைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது. மருந்து, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் இருப்பு, தேவைகளை அறிந்து கொள்ள முன்னேற்பாடாக ஒரு குழுவை அமைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Next Story