மாநில செய்திகள்

தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி வாழ்த்து + "||" + Prime Minister Modi congratulates chief Minister MK Stalin

தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி வாழ்த்து

தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற  மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி  வாழ்த்து
தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.  முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மு. க ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, தலைமைச்செயலகம் சென்று முதல் அமைச்சராக தனது பணிகளை தொடங்கினார்.

முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.  அதேபோல், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசித்த போது சோனியா காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாரிசில் நடைபெறும் ‘விவாடெக்’ டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை
விவாடெக் என்பது 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் நகரத்தில் நடைபெறும் ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் மற்றும் புதுமை நிறுவனங்களின் நிகழ்ச்சியாகும்.
2. முதல்- அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் - 17 ந்தேதி பிரதமருடன் சந்திப்பு
3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் முழு விவரம்
3. இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பென்னட்டிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நஃப்தலி பென்னட்டிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. கொரோனா 2-வது அலையின் போது உதவியதற்காக ஜி 7 நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி
ஜி - 7 அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
5. மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி பிரதமரின் அறிவிப்பு தடுப்பூசி தட்டுப்பாடு நீங்குமா...?
தடுப்பூசி கொள்கையில் மத்திய அரசு மாற்றம் செய்து உள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நீங்கும்.