முதல்-அமைச்சரின் செயலாளராக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு


முதல்-அமைச்சரின் செயலாளராக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 7 May 2021 8:10 PM GMT (Updated: 7 May 2021 8:10 PM GMT)

முதல்-அமைச்சரின் செயலாளராக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஏற்கனவே இருந்த முதல்-அமைச்சரின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய செயலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொல்லியல் ஆணையர் டி.உதயசந்திரன், முதல்-அமைச்சரின் செயலாளர்-1 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத், முதல்-அமைச்சரின் செயலாளர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனு ஜார்ஜ்

அருங்காட்சியகங்கள் ஆணையர் எம்.எஸ்.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்-3 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிற்சாலைகள் ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக இயக்குனர் அனு ஜார்ஜ் முதல்-அமைச்சரின் செயலாளர்-4 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story