'மகேந்திரன் கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை' மக்கள் நீதி மய்யம் விளக்கம்


மகேந்திரன் கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை மக்கள் நீதி மய்யம் விளக்கம்
x
தினத்தந்தி 7 May 2021 8:59 PM GMT (Updated: 7 May 2021 8:59 PM GMT)

'மகேந்திரன் கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை' மக்கள் நீதி மய்யம் விளக்கம்.

சென்னை, 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தல் தோல்வி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நிர்வாக குழு உறுப்பினர்கள் கட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜினாமா, கட்சியின் துணைத்தலைவர் கட்சியில் இருந்து விலகியது அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியில் இருந்து விலகிய ஆர்.மகேந்திரன், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேர்தலில் அந்த கட்சிக்காக பணியாற்றிய ‘சங்க்யா சொல்யூசன்ஸ்' நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியா வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் உருவான காலம் முதல் கமல்ஹாசனுடன் பயணிப்பவன் என்ற முறையில், மகேந்திரன் கூறிய குற்றச்சாட்டுகள் எதிலும் உண்மையில்லை” என்று கூறியுள்ளார்.

Next Story