வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் பலமணி நேரம் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்


வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் பலமணி நேரம் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்
x
தினத்தந்தி 7 May 2021 10:09 PM GMT (Updated: 7 May 2021 10:09 PM GMT)

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் பலமணி நேரம் கொரோனா நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர், 

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தினமும் காலையில் சுமார் 10 ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொரோனா நோயாளிகள் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்கள் வருகின்றனர். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவு முன்பு பல மணி நேரம் காத்திருக்கின்றனர். இதனால் சில நோயாளிகள் ஆம்புலன்சிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

போதிய ஆக்சிஜன் வசதி இல்லாததால் பல மணி நேரம் ஆம்புலன்சிலேயே காக்க வைக்கப்படுவதாகவும், வென்டிலேட்டர் வசதி இல்லை என்று வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என கூறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் மறுப்பு

ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரும்போது இம்மாதிரியான பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் படுக்கைகள் பற்றாக்குறையோ, டாக்டர்கள் பற்றாக்குறையோ, ஆக்சிஜன் பற்றாக்குறையோ இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story