மாநில செய்திகள்

‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கம் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் + "||" + Shilpa Prabhakar Satish appointed Special Officer for Creation of New Department of ‘First Minister in Your Constituency’

‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கம் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்

‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கம் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்
தமிழகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீசை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

முதல்-அமைச்சர் தேர்தல் பரப்புரையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் ஆய்வு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றிட புதிய துறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

அதன்படி, ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை, தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்படுகிறது.

சிறப்பு அலுவலர் ஷில்பா

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். இவர் முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் பணியாற்றுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், நெல்லை மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிற்சாலை ஊழியர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது
தொழிற்சாலை ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்றும், பணியிடங்களில் ஊழியர்கள் முக கவசம் அணிந்திருப்பதை நிர்வாகம் தரப்பில் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
2. திருவள்ளுவர், காமராஜர், அண்ணா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
திருவள்ளுவர், காமராஜர், அண்ணா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு.
3. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி - அரசு அறிவிப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
4. கொரோனா பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
கொரோனா தொற்று பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
5. லேசான தொற்றிருந்தால் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்: கொரோனா நோயாளிகளை 3 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க முடிவு
கொரோனா நோயாளிகளை 3 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட சிகிச்சை முறையை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.