முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 9 May 2021 1:49 AM GMT (Updated: 9 May 2021 1:49 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 7-ந் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டது. இந்த புதிய ஆட்சி தொடங்கிய 3-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசரமாக அமைச்சரவை கூட்டப்படுகிறது.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள், மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக எழுந்துள்ள அவசர நிலை உள்ளிட்ட அம்சங்களும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

Next Story