மாநில செய்திகள்

தமிழக சட்டசபையின் சபாநாயகராகிறார் அப்பாவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு + "||" + Appavu becomes Speaker of the Tamil Nadu Assembly Meeting with First Minister MK Stalin

தமிழக சட்டசபையின் சபாநாயகராகிறார் அப்பாவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தமிழக சட்டசபையின் சபாநாயகராகிறார் அப்பாவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
தமிழக சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர் நேற்று சந்தித்தார்.
சென்னை, 

தமிழக சட்டசபையின் முக்கிய பொறுப்புகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு, புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சபாநாயகராக யாரை தி.மு.க. நிறுத்தும் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. அந்த பதவிக்கு, சட்டசபையில் அதிக நாட்கள் பணியாற்றிய உறுப்பினர் தகுதி பெற்றவராக கருதப்படுவார்.

அந்த வகையில் ராதாபுரத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அப்பாவு, சபாநாயகராக தி.மு.க.வினால் முன்னிறுத்தப்படுவார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராதாபுரம் அப்பாவு

ராதாபுரம் தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 1996-2001-ம் ஆண்டில் எம்.எல்.ஏ.யாக பணியாற்றினார். பின்னர் அதே தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி வாகை சூடி, 2001-2006-ம் ஆண்டிலும் எம்.எல்.ஏ.வானார்.

பின்னர் அவர் தி.மு.க.வில் சேர்ந்து 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். அந்த முறையும் அவர் எம்.எல்.ஏ.வாகி 2006-11-ம் ஆண்டுகளில் மக்கள் பணியாற்றினார். ஆனால் 2011-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிக்கு வழங்கப்பட்டது.

மீண்டும் வெற்றி

எனவே 2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டார். அப்போது மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் இன்பதுரையிடம் தோற்றார். இந்த தேர்தல் குறித்து அப்பாவு வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கின் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு எப்போதும் வரலாம் என்ற சூழல் நிலவுகிறது.

அதன் பின்னர் தற்போது நடந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் இன்பதுரையை எதிர்த்து ராதாபுரத்தில் தி.மு.க. சார்பில் அப்பாவு போட்டியிட்டார். இதில் அப்பாவு வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க. முடிவு

சட்டசபை பணியில் நீண்ட அனுபவம் பெற்றுள்ள அப்பாவுவை சபாநாயகராக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அதைத்தொடர்ந்து சென்னை தலைமைச்செயலகத்திற்கு வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அப்பாவு நேற்று மாலை வந்து சந்தித்து பேசினார். சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனுவை 11-ந் தேதி பகல் 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

அதுபோல துணை சபாநாயகர் பதவிக்கு தி.மு.க. சார்பில் கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி முன்னிறுத்தப்படுகிறார். இவர் முந்தைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர். சட்டசபையில் நீண்ட அனுபவம் பெற்றுள்ளவர். இவரும் துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு: மு.க.ஸ்டாலின் 16-ந் தேதி டெல்லி பயணம் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசுகிறார்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசுகிறார்.
2. தமிழக சட்டசபை முதல் கூட்டம்: கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் வருகிற 21-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
3. தமிழக ஆளுநருடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார்.
4. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்திப்பு.
5. மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை
மு.க.ஸ்டாலின் உடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்பட அதிகாரிகள் சந்தித்தனர். கொரோனாவை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.